பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் கிரண்(வயது 27). இவர், பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் பணியாற்றினார். அதே நிறுவனத்தில் பெங்களூரு பேடரஹள்ளி அருகே அஞ்சனாபுராவை சேர்ந்த பிரேமா (27) என்பவரும் வேலை செய்தார். 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் சமீபத்தில் பிரிந்து விட்டனர்.
இதற்கிடையில், அஞ்சனாபுராவில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு காதலன் கிரணை, வெளிநாட்டு பாணியில் பன்றேன் வா என பிரேமா ஆசைகாட்டி வரவழைத்தார். அங்கு வைத்து 2 பேரும் அரை நிர்வாணமாக இருந்துள்ளனர். அப்போது வெளிநாட்டு பாணியில் தனது காதலை வெளிப்படுத்த போவதாக கூறி, கிரணின் கை, கால்களை கட்டியதுடன், அவரது கண்களையும் துணியால் கட்டினார். அதன்பிறகு, கிரணை மண்எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து பிரேமா கொலை செய்திருந்தார். பல கனவுகளோடு உற்சாகமாக சென்ற காதலனுக்கு பின்னர் நடக்கபோகும் விபரீதம் சம்பவம் தெரியாமல் போனது.
முதலில் கிரண் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பதாக பிரேமா கூறினார். அதன்பிறகு நடத்திய விசாரணையில் தனது காதலனை கொலை செய்ததை பிரேமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை கைது செய்தனர். கிரணின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டு இருந்தது. நேற்று மதியம் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரு டைய தந்தை நரசிம்மய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகனின் உடலை பார்த்து நரசிம்மய்யாவும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதார்கள். நேற்று முன்தினம் கிரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக கிரணின் தாயிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். தற்போது அவர் சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகன் உயிருடன் கொல்லப்பட்டது குறித்து கிரணின் தாய்க்கு தெரிவிக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறினர்.
அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் கிரணின் உடல் துமகூருவுக்கு கொண்டு செல்லப்பட் டது. இதற்கிடையில், கைதான பிரேமாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப் போது காதலனை உயிருடன் எரித்துக் கொன்றது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக ஒரே செல்போன் நிறுவனத்தில் கிரண், பிரேமா ஆகியோர் பணியாற்றியதால், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பிரேமாவுக்கு முன்பாக வேறு ஒரு பெண்ணை கிரண் காதலித்துள்ளார். அந்த இளம்பெண்ணை, கிரண் பிரிந்திருந்தார். ஆனாலும் சமீபத் தில் தனது முன்னாள் காதலியுடன் கிரண் நெருக்கமானார்.
அதே நேரத்தில் பிரேமாவுடன் பேசி பழகுவதை கிரண் நிறுத்தியுள்ளார். அவரது செல்போன் எண்ணையும் கிரண் 'பிளாக்' செய்தார். அத்துடன் முன்னாள் காதலியின் பிறந்தநாளை கொண்டாடிய கிரண், அவருடன் எடுத்த புகைப்படங்களை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இதைப்பார்த்த பிரேமா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தன்னை விட்டு விலகியதுடன், முன்னாள் காதலியை கரம் பிடிக்க கிரண் திட்டமிடுவதாக பிரேமா நினைத்துள்ளார்.
தனக்கு கிடைக்காத கிரண் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என பிரேமா முடிவு செய்தார். இதற்காக கிரணை கொலை செய்துவிட்டு, பிரேமாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். கிரணை எப்படி கொலை செய்யலாம் என இணையதளத்தில் சில வீடியோக்களையும் பிரேமா பார்த்துள்ளார். அத்துடன் ஆன்லைன் மூலமாக பெல்ட், கை விலங்கு உள்ளிட்ட பொருட்களையும் அவர் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, வேறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து கிரணை தொடர்பு கொண்டு விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை பரிசாக அளிப்பதாக பிரேமா கூறியுள்ளார்.
அதன்படி 2 பேரும் அரை நிர்வாணமாக மாறி நெருக்கமாக இருந்துள்ளனர். அந்த சந்தர்ப் பத்தில் ஏற்கனவே தான் ஆன்லைனில் வாங்கி வைத்திருந்த கை விலங்கு, பெல்ட் ஆகி யவை மூலமாக கிரணின் கை, கால்களை கட்டியுள்ளார். கண்களையும் துணியால் கட்டியுள்ளார். அவரை படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தள்ளிவிட்ட பிரேமா, குளியலறையில் இருந்து மண்எண்ணெயை எடுத்து வந்து கிரண் உடலில் ஊற்றி உயிருடன் தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் கிரண் உடல் கருகி சாவதை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்துள்ளார்.
அதே நேரத்தில் கிரணை கொன்றுவிட்டு தற்கொலை செய்வதற்காக விஷம் மற்றும் மாத்திரைகளை பிரேமா வாங்கி வைத்துள்ளார். ஆனால் கிரண் உடலில் பிடித்த தீ வீடு முழுவதும் பரவியதால் பிரேமா வெளியே ஓடிவந்துள்ளார். அரை நிர்வாணமாக இருந்த அவரை பக்கத்து வீட்டு பெண் அழைத்து சென்று துணிகளை வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான பிரேமாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தனது ஒரே மகனை கொன்ற பிரேமாவுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று கிரணின் தந்தை நரசிம்மய்யா கண்ணீர் மல்க தெரிவித்தார்.