தேசிய செய்திகள்

கணவர் வேலைக்கு சென்றதும் கள்ளக்காதலருடன் உல்லாசம்.. அரசு ஊழியருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி; திடுக்கிடும் தகவல்

அதிர்ச்சியடைந்த சஷாங்க், தீபாவளிக்கு பின்னர் வேறு வீட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் கள்ளக்காதலருடன் இணைந்து அரசு ஊழியரை கொல்ல மனைவி திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் காசியாபாத் நகரில் வசுந்தரா செக்டார்-1 பகுதியில் வசித்து வருபவர் சஷாங்க் கந்தாரியா. இவருடைய மனைவி பிரியா ஷர்மா. இருவரும் அரசு அலுவலகத்தில் கணக்காளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

2-வது திருமணம்

4 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், பிரியாவுக்கு இது 2-வது திருமணம் ஆகும். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பிரியாவுக்கு ஜிம்முக்கு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இதனால், 8 மாதங்களாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 26-ந்தேதி காலையில் வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த சஷாங்கை மர்ம நபர் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த நபர் சிக்காமல் தப்பியோடி விட்டார். அப்போது, பிரியா காரில் ஏறி, வெளியே சென்று விட்டார்.

ஜிம் பயிற்சியாளர்

இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பிரியாவுக்கு ஜிம் பயிற்சியாளர் பிரதாப் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி, சாட்டிங் செய்து வந்துள்ளனர்.

சில சமயம் உடல்நலம் சரியில்லை என கூறி பிரியா வீட்டிலேயே தங்கி விடுவார். கணவர் வேலைக்கு சென்றதும் சிங்கை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கைது

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஒரு கட்டத்தில் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சஷாங்க், தீபாவளிக்கு பின்னர் வேறு வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதனால், சஷாங்கை கொலை செய்து விடும்படி, சிங்கிடம் பிரியா கூறியுள்ளார்.

சஷாங்க் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரியா மற்றும் ஜிம் பயிற்சியாளரை கைது செய்தனர். சஷாங்க் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT