தேசிய செய்திகள்

கார் டிரைவர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு தூக்கு தண்டனை

புளோரா நான்சி, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட் டம் பத்ராவதி நகர் காகித டவுன் பகுதியை சேர்ந்தவர் புளோரா நான்சி. இவருக்கும் அவரது உறவினரான பிரகாஷ் பாபு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் பாபு வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். புளோரா நான்சி, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் புளோரா நான்சிக்கும், ராஜசேகர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரகாஷ் பாபுவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரகாஷ் பாபுவை தீர்த்துக்கட்ட தனது கள்ளக்காதலன் ராஜசேக ருடன் சேர்ந்து புளோரா நான்சி திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி பாகற்காய் சாறில் மயக்க மருந்து கலந்து கணவர் பிரகாஷ் பாபுவுக்கு கொடுத்துள்ளார். அதனை குடித்த பிறகு பிரகாஷ் பாபு மயக்கம் அடைந்தார்.

பின்னர் கள்ளக்காதலன் ராஜசேகரை புளோரா நான்சி வீட்டுக்கு வரவழைத்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து பிரகாஷ் பாபுவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் காகித டவுன் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி இந்திரா மயில்சாமி தீர்ப்பு வழங்கினார். அப்போது புளோரா நான்சி, ராஜசேகர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூ பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 2 பேருக்கும் தூக்கு தண் டனை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.