தேசிய செய்திகள்

தாய் மதத்திற்கு மீண்டும் திரும்பினால் பட்டியலின அந்தஸ்து கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

இந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி போதகரானார். இந்த நிலையில், ராமிரெட்டி என்பவரால் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் சின்தடா ஆனந்த் மேல்முறையீடு செய்தார்.

சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது. வேறு மதத்திற்கு மாறும்போது, அதுவரை அனுபவித்து வந்த பட்டியலின அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர். இது கடந்த 1950-ம் ஆண்டில் பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பின் முழு விவரமும் தற்போது வெளிவந்துள்ளது. அதில், பிற மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பி பட்டியலின அந்தஸ்து பெற வேண்டும் எனில், 3 ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்திற்கு மீண்டும் மாறிய நபர், தொடக்கத்தில் 1950-ம் ஆண்டில் பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவின் கீழ் அறிவிக்கப்பட்ட சாதியில் தான் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மாறிய மதத்தை முழுவதுமாக துறந்துவிட்டு, மீண்டும் தாய் மதம் திரும்பியதற்கான நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும். மேலும், அவர் தன் பழைய சாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தாய் மதம் திரும்பியதை, சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஏற்றுக் கொண்டதற்கான சான்று இருக்க வேண்டும். மாற்று மதத்தில் இருந்து தாய் மதம் திரும்பிவிட்டதாக ஒருவர் சுயமாக அறிவித்துக்கொள்வது மட்டும் போதாது. அசல் சமூக மக்கள் அவரை தங்களது சமூகத்தை சேர்ந்தவராக அங்கீகரிப்பது மிகவும் அந்தஸ்தை அந்த நபரால் கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. பழங்குடியினர் விவகாரத்தில் மதமாற்றம் பெரிய தடையாக இல்லை. அதாவது, அவர் மாற்று மதத்திற்கு மாறினாலும், பழங்குடியின அந்தஸ்தை உடனடியாக இழக்கமாட்டார்.

இருந்தாலும், மதம் மாறியவர்கள் பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசார விழுமியங்களை பின்பற்றி வாழ்கின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், பழங்குடியின சமூகத்தவரால் ஏற்கப்பட்டவராக இருக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது.