ஈரான் மீதான போர் 
தேசிய செய்திகள்

ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்தியா 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை தாங்கி 3 முறை இந்தியாவில் மாநாட்டை நடத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

'பிரிக்ஸ்' நாடுகள்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் 'பிரிக்' என்ற பெயர் உருவானது. 2006-ல் அமைப்பு முறையாக உருவெடுத்து. 2009-ல் முதல் உச்சி மாநாடு நடந்தது. தென்னாப்பிரிக்கா இணைந்ததும் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பாக பெயர் பெற்றது. பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகியவை இணைந்தன. 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ், அமைப் பில் 2025-ல் பெலாரஸ், நைஜீரியா, உகாண்டா உள்பட 10 நாடுகளும் இணைத்துக் கொள் ளப்பட்டன.

இந்த 21 நாடுகள் உலக பொருளாதாரத்தில் சுமார் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சதவீதத்தையும் கொண்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா தலைமையில்...

இந்தியா 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை தாங்கி 3 முறை இந்தியாவில் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாளை யும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் 4-வது முறையாக (18-வது) உச்சி மாநாட்டை நடத் துகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்பது சிறப் பம்சமாக பார்க்கப்படுகிறது. பிரேசில் அதிபர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கலந்து கொள்கிறார். மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரசும் பங்கேற்கிறார். இவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

புதின், ஜின்பிங்குடன் சந்திப்பு

இந்த சந்திப்புகளில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை இன்று (வெள்ளிக் கிழமை) டெல்லியில் சந்திக்கிறார். சீன அதிபரை நாளை (சனிக்கிழமை) சந்திக்கிறார். இந்த சந்திப்புகளில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்படுகின்றன.

ரஷிய அதிபருடனான பிரதமரின் பேச்சு வார்த்தையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்து ழைப்பு முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் ஏற்கனவே தெரிவித்தார். ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர் பாக அமெரிக்காவில் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடை பெறுவதால் உலகமே இதை உற்று நோக்குகிறது.

கேள்விக்குறி

சீன அதிபருடனான பேச்சுவார்த்தையை பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்க னவே எல்லை பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதில் தற்போது ஒரு சுமூக நிலை நீடித்து வந்தாலும், பேச்சுவார்த்தை தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து உள்ளன.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் ஈரான் நாடு மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக ரஷியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இந்த நிலையில் சீன அதிபர் இந்த மாத இறு தியில் அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரை சந்திக்கிறார். இதனால் இந்த உச்சி மாநாட் டில் அவரது செயல்பாடு பெரிய அளவில் இருக்காது என சொல்லப்படுகிறது.

தாக்கம்

இதற்கிடையே இந்த மாநாட்டில் இன்னொரு முக்கிய பிரச்சினையும் எழுகிறது. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஈரானுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே மோதல்கள் உள் ளன. இந்த மோதல் விவகாரம், மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

மாநாட்டையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 31 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT