தேசிய செய்திகள்

காதலனுடன் திருமணம் செய்துவைக்க மறுப்பு: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

இளம்பெண் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

லக்னோ,

காதலனுடன் திருமணம் செய்துவைக்க பெற்றோர் மறுத்ததால் இளம்பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் பைத்வாலியா கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஷிஷ்கர் கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறி காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் தற்கொலை முயற்சி

இந்நிலையில், காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள செல்போன் டவர் மீது ஏறிய இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். காதலனுடன் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் மறுத்ததால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து அறிந்த குடும்பத்தினர், போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணை சமாதானப்படுத்தி அவரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து செல்போன் டவரில் இருந்து இளம்பெண் கீழே இறங்கிய நிலையில் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT