தேசிய செய்திகள்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

குழந்தைகளும், தாயும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அக்கிஹெப்பலு கிராமத்தை சேர்ந்தவர் அப்தாப். இவரது மனைவி அரிபா பானு. இந்த நிலையில் அரிபா பானு கர்ப்பமானார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது 3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து 3 குழந்தைகளும் எந்தவித பிரச்சினை இன்றியும் பிறக்க தொடர்ந்து டாக்டர்களின் அறிவுரையை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் ஆகும். 3 குழந்தைகளும், தாயும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற அரிபா பானுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT