கோழிக்கோடு,
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே பொயில்காவை அடுத்த பாரக்கல் தாழே வீட்டை சேர்ந்தவர் சுதா (வயது 45). இந்தநிலையில் வீட்டு அருகே உள்ள ஒரு இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுதா பிணமாக கிடந்தார்.
மேலும் அருகே ரத்தக்கறை படிந்த அரிவாள் கிடந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொயிலாண்டி போலீசார் விரைந்து வந்து இறந்த சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடந்தது. அதில் அவரது கணவரான கிருஷ்ணன் குட்டி என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தான். குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர்.
மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணன் குட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.