தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: கணவனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டிய இளம்பெண்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்ட இளம்பெண் அவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் நதீம். இவருக்கு திருமணமாகி ஷப்னம் என்ற மனைவி உள்ளார்.

இதனிடையே, கணவனின் நடத்தையில் இளம்பெண் ஷப்னமிற்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்

இந்நிலையில், நதீமிற்கு நேற்று இரவு மயக்க மருந்து கலந்த பாலை ஷப்னம் கொடுத்துள்ளார். இதை குடித்த நதீம் தனது அறையில் மயங்கிய நிலையில் உறங்கியுள்ளார். அப்போது, ஷப்னம் தனது கணவன் நதீமின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த நதீம் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று நமீமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டிய இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT