தேசிய செய்திகள்

கழுத்தை நெரித்து பெண் கொலை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு:-

பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் முக்தா பர்பன்(வயது 38). இவரும், ஒரு வாலிபரும் கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக முக்தாவின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று முன்தினம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்கள். அப்போது முக்தா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒயிட்பீல்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முக்தாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. முக்தாவுடன் கணவர் போல் சேர்ந்து வாழ்ந்து வந்த வாலிபர் தான், அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக முக்தாவை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது கொலைக்கான சரியான காரணம் என்ன?

என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

SCROLL FOR NEXT