தேசிய செய்திகள்

மதுபோதையில் கார் ஓட்டிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

அஸ்வினி மதுபோதையில் காரை ஓட்டியது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது.

மும்பை,

மதுபோதையில் கார் ஓட்டிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கலிபடல் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் அஸ்வினி கீகன் (வயது 39).

பெண் போலீஸ் காண்ஸ்டபிள் சஸ்பெண்ட்

இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார். புனேவின் மஞ்சாரி பகுதியில் மதுபோதையில் அஸ்வினி காரை ஓட்டியுள்ளார். போலீஸ் உடையில் இருந்த அஸ்வினி காரை ஓட்டிய நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நபரையும் அநாகரீகமாக பேசி, தாக்க முற்பட்டார். அஸ்வினி மதுபோதையில் காரை ஓட்டி, கேள்வி எழுப்ப முயன்ற நபரை தாக்க முற்பட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், மதுபோதையில் காரை ஓட்டிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அஸ்வினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கான்ஸ்டபிள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT