இஸ்தான்புல்
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் பெண் ஒருவர் கடைக்கு சென்று, ஆண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த சம்பவம் ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. பெண் ஒருவர் ஒவ்வொரு கடையாக சென்று, ஆண் பணியாளர்களை நெருங்கி அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். திடீரென்று அவர் இப்படி நடந்து கொண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவர், ஒரு கட்டத்தில் அவர்களை முத்தமிட முயன்றுள்ளார். 30 வயதுடைய அந்த பெண், உம்ரானியே என்ற பகுதியில் இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறார். ஆண்களை தகாத முறையில் கண்ட இடங்களில் தொட முயற்சிப்பது, நபருக்கு முத்தம் கொடுக்க முயன்றது தொடர்பான வீடியோக்களும் சில சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அவர் உம்ரானியே தவிர இஸ்தான்புல்லின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்று நடந்து இருக்கிறார். அப்போது அவர், நான் ஒரு மாணவி. என்னுடைய சொந்த செலவுகளுக்காக, பணம் சம்பாதிக்க வாசனை திரவியங்களை விற்பனை செய்து வருகிறேன் என்று அவர்களிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கோர்ட்டிலும் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு மனநலம் சார்ந்த ஒரு வகை வியாதி பாதிப்பு உள்ளது என்றும் அதனால், அப்படி நடந்து கொள்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசயம் பரவியதும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் பல்வேறு விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆண்கள் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு விட்டு, இதேபோன்று வியாதி பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று கூற முடியுமா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர், ஆண்களை நன்றாக பாருங்கள். அவர்கள் கைகளை காட்டுகிறார்கள். இறுக்கம் நிறைந்த பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து இருக்கிறார்கள் என பதிவிட்டு இருக்கிறார். ஆண்களை தூண்டும் வகையிலான ஆடைகளை பெண்கள் அணிகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படும் சூழலில், பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இதுபோன்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இன்னொருவர், ஆண்கள் அந்த பெண் செல்லும் திசையை ஏன் பார்க்கிறார்கள்? ஏனெனில் அவர்களுக்கு அது தேவையாக உள்ளது என தெரிவித்து இருக்கிறார்.