தேசிய செய்திகள்

பெண்கள் ஆரோக்கியமே நாட்டின் பலம் - மன்சுக் மாண்டவியா பெருமிதம்

உடல் நலத்திற்கு சைக்கிள் ஓட்டுவது நல்லது

கொல்கத்தா,

மத்திய விளையாட்டு துறை மந்திரி மன்சுக் மண்டவியா கொல்கத்தாவில் நடைபெற்ற ஃபிட் இந்தியா பிங்க் சைக்ளோத்தான் 2.0 தொடங்கி வைத்தார்.

இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாட்டிற்கு பெண்கள் அதிகாரமளித்தல் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்தார்.

நமது பெண்கள் நாட்டில் 14,000க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் இயக்குகிறார்கள் . உடல் நலத்திற்கு சைக்கிள் ஓட்டுவது நல்லது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் சவாலாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது முலம் நச்சுப் புகையைத் தவிர்த்து, சுத்தமான காற்றையும், பசுமையான சுற்றுச்சூழலையும் உறுதி செய்யவும் ஒரே தீர்வு, மேலும் அது நமது பூமிக்கு நாம் செய்யும் ஒரு பெரும் உதவியாகும்.

நமது நாட்டின் பெண்கள் அனைவருக்கும் இந்த செய்தியை வழங்கியுள்ளார், நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அதிகாரம் பெற வேண்டும் என மண்டவியா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோத உள்ளது.இன்றைய போட்டியில் நமது கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்," என்று மண்டவியா கூறினார்.