தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை தனது பையில் வைத்து எடுத்துச்சென்றார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீலேகா. இவர் குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை தனது பையில் வைத்து எடுத்துச்சென்றார்.

கூலித்தொழிலாளி:

ஆனால் செல்லும் வழியில் கைப்பை மாயமாகி விட்டது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அந்த பையை லட்சுமணராவ் என்ற கூலித்தொழிலாளி கண்டெடுத்தார்.

அந்த பையில் இருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து ஸ்ரீலேகாவுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் நகைப்பையை போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து ஸ்ரீலேகாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. கூலித்தொழிலாளியின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.