தேசிய செய்திகள்

3-வது மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட கியாஸ் சிலிண்டர் தாக்கி வாலிபர் பலி

குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர், கியாஸ் சிலிண்டரை எடுத்து, 3-வது மாடியில் இருந்து கீழே போட்டார்.

டெல்லி,

டெல்லியில் பிந்தாபூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவம் சர்மா (வயது 24). ஒரு தொழிற்சாலையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மது அருந்தினார்.

வாகன நிறுத்த பகுதியில், பிற குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்று கியாஸ் சிலிண்டரை எடுத்து, 3-வது மாடியில் இருந்து கீழே போட்டார். அந்த சிலிண்டர் கீழே நின்று கொண்டிருந்த சாஹில் (28) என்ற வாலிபரின் தலையில் விழுந்தது.

பலத்த காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். அவர் அதே குடியிருப்பில் வசித்து வந்தவர். வாரச்சந்தையில் பணியாற்றி வந்த அவருக்கு மனைவியும், ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இதையடுத்து சிவம் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT