தேசிய செய்திகள்

‘பைக் டாக்சி்’க்கு பணம் கொடுக்காமல் சென்ற இளம்பெண்-சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

1½ மணி நேரம் பயணம் செய்த பின் இளம்பெண் ஒருவர் 'பைக் டாக்சி'க்கு பணம் கொடுக்காமல் சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண்

பெங்களூரு சுபேதார்பாளையாவை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பெங்களூரு குந்தூரு ரோட்டுக்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் மழை பெய்ததால் அவர் 'பைக் டாக்சி' ஒன்றை முன்பதிவு செய்தார்.அவர் முன்பதிவு செய்த சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் இளம்பெண்ணை ஏற்றிக் கொண்டு அவர் செல்ல வேண்டிய இடமான சுபேதார்பாளையா நோக்கி புறப்பட்டார். அப்போது அதற் கான கட்டணம் ரூ.384 என்பதையும் அந்த வாலிபர் தெரிவித்தார்.

பணம் கொடுக்காமல் சென்றார்

பயணம் முடிந்து இறங்கும்போது தான் பணம் கொடுப்பதாக இளம்பெண் கூறி னார். அதையடுத்து 89 நிமிடங்கள், அதாவது 1% மணி நேரம் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று சுபேதார்பாளையாவை அடைந்தார். அங்கு அந்த பெண் தான் செல்ல வேண்டிய இடம் குறித்து தெரிவிக்கவும், சரியாக அதே இடத்துக்கு கொண்டு சென்று வாலிபர் இறக்கிவிட்டார்.

அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியவுடன் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், 'அக்கா, அக்கா' என்று அழைத்தபடி இளம்பெண்ணின் பின் னால் ஓடி பணம் கேட்டார்.

சமூக வலைதளங்களில் வெளியிட்டார்

ஆனால் அந்த இளம்பெண், என்னிடம் பணம் இல்லை. உன்னால் என்ன செய்ய முடியுமோ?, அதை செய்து கொள், மீறி பணம் கேட்டால் உன்னை அடித்து விடுவேன் என்று கூறிவிட்டு கிடுகிடுவென நடந்து சென்றார். இதனால் நொந்துபோன அந்த வாலிபர், பணம் தராமல் சென்ற இளம்பெண்ணை செல் போனில் வீடியோ எடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி சமூக வலை தளங்களில் அதை வெளியிட்டார்.அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் இளம்பெண்ணுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT