பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமோஹள்ளியை சேர்ந்த வர் பூமிகா (வயது 23). இவர் கடந்த 3-ந்தேதி காதலன் கிரண் என்பவரை சந்திக்க காரில் பெங்களூருவில் இருந்து சென்னப்பட்டணாவுக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அன்றைய தினம் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பூமிகா உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து சென்னப்பட்டணா போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பூமிகாவின் பெற்றோர், காதலன் கிரண் மீது சென்னப்பட்டணா போலீசில் பரபரப்பு புகாரை அளித்துள்ளனர். அதில், பூமிகாவும், கிரண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலன் கிரணை சந்திக்க பூமிகா, காரில் சென்னப்பட்டணாவுக்கு சென்றார். காரில் சென்னப்பட்டணாவுக்கு சென்ற பூமிகா, எப்படி மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார்?. அவரது சாவில் சந்தேகம் உள்ளது. காதலன் கிரணும், அவரது சகோதரர் ஆஷித் ஆகியோர் சேர்ந்து பூமிகாவை தாக்கி கொன்றுவிட்டு விபத்து போல் நாட கமாடுகிறார்கள்.
இதனால் கிரணையும், அவரது சகோதரர் ஆஷித்தையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். பூமிகா விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பெற்றோர். காதலன் கொலை செய்ததாக புகார் அளித்துள்ளதால். இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கிரணை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.