தேசிய செய்திகள்

கொல்லத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: பாதிரியார் கைது

கொல்லம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆசிரமத்தில் இருந்த ஒரு பாதிரியார், அங்கு பிரார்த்தனைக்காக வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கொல்லம்,

கேரள மாநிலம் கொல்லத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாதிரியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண் பாலியல் பலாத்காரம்

கேரளம் மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொல்லம் அருகே பரிமணம் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ ஆசிரமத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். அப்போது அங்கு பிரார்த்தனைக்காக வந்த இளம்பெண்ணை டென்னிஸ் பிரவீன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பாதிரியார் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டென்னிஸ் பிரவீனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை கொல்லம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT