தேசிய செய்திகள்

பதவியை விட இளைஞர்களும், மாணவர்களுமே எங்களுக்கு முக்கியம்: உள்துறை மந்திரி அமித்ஷா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் போராட்டத்திற்கு பணிந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தின் விளைவாக, நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எங்களுக்கு பதவிகளை விட மாணவர்கள், இளைஞர்களும்தான் முக்கியம்" என தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜகவை பொறுத்தவரை இந்த நாடும், நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும்தான் எந்த ஒரு பதவியை விட மேலானவர்கள். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா இந்த உயரிய கொள்கைகளை வெளிகாட்டுகிறது. இளைஞர்களின் உணர்வுகளுக்கு மோடி அரசு மதிப்பளிக்கிறது.அதே நேரம், இந்த அரசு வினாத்தாள் கசிவு விஷயத்தை தீவிரமாக அணுகியிருக்கிறது. இந்த முறைகேடுகளை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதிலும் அரசு உறுதியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம்

'நீட்' வினாத்தாள் முறைகேடுக்கு எதிராக டெல் லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி போராட்டம் தொடங்கினர்.அந்த அமைப்பின் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் களத்தில் குதித்தனர். நாளாக நாளாக போராட்டம் வீரியம் எடுத்தது.எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியு றுத்தி அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடங்க செய்தனர்.

பேச்சுவார்த்தை

இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. எனவே சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் மத்திய அரசு தரப்பில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதல் கட்ட பேச்சு வார்த்தை, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. அதில் முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு நேற்று முன்தினம் 2-வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியது. ஆனாலும் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தான் முக்கிய கோரிக்கை என்றும் கூறினர். அதற்கு நேற்று மாலை வரை அரசு காலஅவகாசம் கேட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று காலை அவர்கள், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால், ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாடு சந்திக்கும் என எச்சரித்தனர்.

ராஜினாமா

இதற்கிடையே கல்வி மந்திரி பதவியை தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.