தேசிய செய்திகள்

பீகாரில் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஏமாற்றிய இளைஞர் கைது

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு​களை சரி​பார்த்த போது, 440-வது ரேங்க் பெற்​றது ரஞ்​சித் குமார் அல்ல என்பது தெரியவந்தது.

பாட்னா,

பீகார் மாநிலம் ஷேக்​புரா மாவட்​டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்​தவர் ரஞ்​சித் குமார். இவர் யு.பி.எஸ்.சி. நடத்​திய சிவில் சர்​வீஸ் தேர்வு முடிவு​கள் அண்​மை​யில் வெளி​யான நிலை​யில், அதில் 440 வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ். அதி​காரி ஆகி​யுள்​ள​தாக கிராம மக்​களிடம் ரஞ்​சித் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கிராமமே கொண்டாட்​டத்​தில் களை கட்டியது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலை​யில் ஷேக்​புரா தொகுதி முன்​னாள் ஆர்​.ஜே.டி. எம்.​எல்.ஏ. விஜய் சாம்​ராட் தனது ஆதரவாளர்களு​டன் ரஞ்​சித் குமார் வீட்​டுக்கு சென்று பூங்கொத்தும், பரிசும் கொடுத்து வாழ்த்​தி​னார். மேலும் உள்​ளூர் போலீ​சார் மஹுலி போலீஸ் நிலை​யத்​துக்கு அழைத்து ரஞ்சித் குமாருக்கு மாலை அணி​வித்து இனிப்பு வழங்​கி வாழ்த்து தெரி​வித்​தனர்.

இந்த சூழலில் அந்த கிராமத்​தின் இளைஞர்​கள் சிலர் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு​களை சரி​பார்த்த போது, 440-வது ரேங்க் பெற்​றது ஷேக்​புரா ரஞ்​சித் குமார் அல்ல, கர்நாட​கா​வின் சிக்​கபள்ளாபூரை சேர்ந்த ரஞ்​சித் குமார் என்​பது தெரிய வந்​தது. அவர் ஏமாற்றியது தெரியவரவே அந்த ஊரே அதிர்ச்சியில் மூழ்கியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதி​காரி ஒருவர் கூறுகையில், “தகவல் அறிந்ததும் ரஞ்சித் குமார் வீட்​டில் இருந்து தப்பி ஓடி​விட்​டார். அவர் டெல்லி சென்​றுள்​ள​தாக​வும் தொலைபேசி அழைப்​பு​களுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் குடும்​பத்​தினர் கூறினர். யு.பி.எஸ்.சி. தேர்​வில் தேர்ச்சி பெற்​ற​தாக ரஞ்​சித் வேண்​டும் என்றே ஏமாற்​றி​னாரா அல்​லது தான் தேர்ச்சி பெற்​று​விட்​ட​தாக தவறு​தலாக நம்​பி​னாரா என்பது குறித்து விசா​ரித்து வரு​கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஏமாற்றிய இளைஞர் ரஞ்​சித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் யாதவை பாராட்டி கலந்துரையாடிய காவல் ஆய்வாளரே, தற்போது அவரை கைதும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.