தேசிய செய்திகள்

திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம்; கள்ளக்காதலியை கல்லால் அடித்து கொன்ற வாலிபர் கைது

சஞ்சய்க்கு 3-வது முறையாக வேறொரு பெண்ணுடன் நிச்ச யதார்த்தம் நடந்தது.

பெலகாவி,

பெலகாவி அருகே தனது திருமணத்தை தொடர்ந்து தடுத்து நிறுத்திய கள் ளக்காதலியை பீர் பாட்டில் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்த வாலி பரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா நானடி கிராமத்தை சேர்ந்தவர் ஐரா வதி (வயது 38). இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும், சிக்கோடியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, ஐராவதிக்கும், பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, 2 பேரும் அடிக்கடி தனிமை யில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு இடையூறு

இந்த நிலையில், சஞ்சய்க்கு அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால், தற்கு ஐராவதி கடும் எதிர்ப்பு தெரி வித்தார். சஞ்சய்க்கு 2 முறை பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஐராவதி தடுத்து நிறுத்தினார்.

இதற்கிடையே, சஞ்சய்க்கு 3-வது முறையாக வேறொரு பெண்ணுடன் நிச்ச யதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த ஐராவதி, இந்த திருமணத்தையும் நடக்க விடாமல் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

அடித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், "ஐராவதி உயிருடன் இருந்தால் தன் னால் திருமணம் செய்து கொள்ள முடியாது” என கருதி அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். அதன்படி, கடந்த 20-ந் தேதி ஐராவதியை தோரணகல் லூவில் உள்ள மலைக்கோவிலுக்கு சஞ்சய் அழைத்து சென்றார்.

ஜராவதி

அங்கு 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய், தான் மறைத்து வைத் திருந்த பீர் பாட்டில் மற்றும் அங்கிருந்த கற்களால் ஐராவதியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஐரா வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சஞ்சய் அவரது உடலை அருகில் உள்ள வனப்பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் கைது

இதற்கிடையே, வேலைக்கு சென்ற ஐராவதி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சிக்கோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஐரா வதியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக சஞ்சய்யுடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சய்யை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், தனது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் ஐராவதியை கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசியதை சஞ்சய் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சஞ்சயை கைது செய்தனர். மேலும், வனப்பகுதியில் கிடந்த ஐராவதியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT