மும்பை,
அரசு தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து புனேயில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குருப்-பி தேர்வு நடந்தது. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் கசிவு அம்ப லமானது. இந்த விவகாரத்தில் தேர்வில் 7-வது இடம்பிடித்த பெண் தேர் வர் உள்பட 7 பேரை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்தநிலையில் அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள். வினாத்தாள் கசிவை கண்டித்து புனேயில் நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் போராட்டம் நடந்தது. தேர்வு செயல்முறைகளில் வெளிப்ப டைத்தன்மை வேண்டும் என அரசு வேலை தேடும் இளைஞர்களும், தேர்வர்களும் என ஆயிரக்கணக்கானவர்கள் திடீரென திரண்டனர்.
பின்னர் புனே ஓம்காரேஸ்வர் கோவில் சவுக்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். இதில் பங்கேற்ற தேர்வர் கள், மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் செயலா ளர் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், நேர்மையான அதி காரிகளை அந்த பதவிகளில் நியமிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) செயல் தலைவர் சுப்ரியா சுலே, அக்கட்சியை சேர்ந்த ரோகித் பவார் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஸ்வஜித் கதம் ஆகியோர் நேரில் சென்று இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சி சார்பில் தேர்வு முறை கேட்டை கண்டித்து நடந்த போராட்டத்தை போன்று, புனேயிலும் திடீரென இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.