தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

புதுடெல்லி,

பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி தமிழ் விளையாட்டுகள் மீது நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. பந்தயம் மற்றும் சூதாட்டம் சார்ந்த இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது தடை செய்யவோ, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

திறன்சார்ந்த விளையாட்டுகளாக இருந்தாலும், பந்தயம் கட்டுதலுக்கு அனுமதிக்க முடியாது. கணிசமான திறன் தேவைப்படும் விளையாட்டுகள்கூட பொது நலனைப் பாதித்தால், அவை ஒழுங்குபடுத்தப்படலாம் என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இருமாநில அரசுகள் கொண்டுவந்த சட்டங்களை ரத்து செய்திருந்த சென்னை மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுகளின் தீர்ப்புகளை ரத்து செய்தது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் அடிமையாகி அதன் மூலம் பணத்தை இழந்து சிலர்தற் கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு முதலில் 2020 நவம்பரில் ஓர்அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இந்தத் தடை சட்டம் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறன் சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 2023-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. சென்னை மற்றும் கர்நாடகம் கோர்ட்டுகள் இணையவழி ரம்மி, போக்கர் போன்றவற்றின் சட்டபூர்வத்தன்மையை உறுதிசெய்த நிலையில், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என உத்தரவு பிறப்பித்தது.