புதுடெல்லி
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று, விவேக் விஹார் மற்றும் பாலம் பகுதிகளில் தலா 9 பேர் தீ விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், டெல்லி அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், 2019 முதல் 2026 மார்ச் வரையிலான ஆண்டுகளில் 543 பேர் பலியாகி உள்ளனர்.
இதில், இந்த ஆண்டின் முதல் பாதியில் 65 பேர் பலியாகி உள்ளனர். இந்த தீ விபத்துகளில் 2019-ம் ஆண்டில் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்ததே அதிக அளவாகும். அதற்கு முன் 1997-ம் ஆண்டில் உபஹார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்ததே அதிக அளவாக இருந்தது.
இதேபோன்று, 2019-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை தீ விபத்துகளில் சிக்கி 4,403 பேர் காயமடைந்து உள்ளனர்.