தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

விவசாயிகள் பிரச்சினைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் என்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:

உலகளாவிய நெருக்கடி உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் எந்த அம்சங்களும் பட்ஜெட்டில் இல்லை.நாட்டின் உண்மையான பிரச்சினைகளை புறக்கணித்து, தவறுகளை சரி செய்ய மறுக்கும் பட்ஜெட். இளைஞர்கள் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

குடும்பங்களில் சேமிப்பு குறைந்து வருவது, உற்பத்தித் துறை சரிவு உள்ளிட்டவற்றை சரி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இந்தியாவின் உண்மையான பொருளாதார நெருக்கடிகளை கண்ணை மூடிக்கொண்டு பட்ஜெட் அணுகுகிறது” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை

மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

மத்திய பட்ஜெட் 2026-2027: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி

Budget 2026; மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்