தேசிய செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பயன் அடைவார்கள்: கர்நாடக மந்திரி சொல்கிறார்

மேகதாதுவில் அணை கட்டினால் அங்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து விடலாம் என்று கூறினார்.

கர்நாடகாவில் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதில் அம்மாநில அரசு உறுதியாக உள்ளது. எனினும், அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும், மத்திய அரசின் அனுமதியை பெற்று மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகாவின் இந்த முயற்சியை முறியடிப்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒரே அணியில் ஒன்றாக உள்ளன. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தனி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.

குடிநீர் தேவை

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக நீர்வளத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ''மேகதாதுவில் புதிதாக அணை கட்டினால் அங்கு 67 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். அதனால் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. பெங்களூருவுக்கு 4.75 டிஎம்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுவதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் மேகதாது அணையின் முக்கிய நோக்கம்.ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மழை பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த சமயங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உருவாகிறது. இந்த மாதம் (ஜூன்) 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

பேசத்தயார்

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மழை பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த சமயங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உருவாகிறது. இந்த மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழ்நாடு சட்டசபையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக ஒன்றிணைந்து போராடவும் முடிவெடுத்துள்ளனர். மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டுக்குதான் பாதிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தால், தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் பங்கை வழங்க சாத்தியமில்லை. ஏனென்றால் மேகதாதுவில் அணை கட்டினால் அங்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து விடலாம். இதனால் இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு தான் லாபம். தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தால் அங்குள்ள விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும்” என்றார்.