செய்திகள்

மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் கவிஅமுதன் (28). கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவர் நேற்று காலை முன்பு வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில வேலைக்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் நாலூர் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்துஜா நகர் அருகே மர்மநபர்கள் கவிஅமுதனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் கவிஅமுதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிஅமுதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT