செய்திகள்

காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி

காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மந்திரி சபையில் நிதி மற்றும் கல்வி மந்திரியாக இருந்தவர் அல்தாப் புகாரி. பின்னர் அவர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் அல்தாப் புகாரி ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு, அரசியல் தளத்தை உருவாக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அல்தாப் புகாரி கூறினார்.

SCROLL FOR NEXT