கோப்புப்படம் 
அரசியல் களம்

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், (4.3.2026) புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT