தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் காங்கிரஸ் கட்சியை பற்றி ஒரு கருத்து கூறியுள்ளார். காங்கிரஸ் என்பது 140 ஆண்டுகள் கால வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்சி. இந்த கட்சியை குறைசொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று நான் விஜய்யிடம் கேட்க விரும்புகிறேன். எவ்வளவோ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து ஓங்கி நிற்கும் ஒரே இயக்கம் காங்கிரஸ்.
எங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும். விஜய் முடிவு செய்ய முடியாது. யாரோ 4 பேர் சேர்ந்தார்கள் என்பதற்காக அதை தூக்கிப் பிடித்துக்கொண்டு கட்சி என்கூட உள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய பேராசை... அநாகரீகமான செயல். அநாகரீக பேச்சை எல்லாரும் போல விஜய்யும் தொடரக்கூடாது. உடனே கைவிட வேண்டும்.
விஜய் கட்சியே விபத்தால் வந்த கட்சிதான். ஆகவே விபத்து நடக்கத்தான் செய்யும். விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் இதுபோன்ற செயல்களில் இருந்து விடுபட வேண்டும். ரசிகர்கள் யார் சென்றாலும் பார்க்கிறார்கள். அஜித் ரோட்டில் சென்றால் தமிழ்நாடே அவர் பின்னால் திரண்டு நிற்கும். துடிப்பான ரசிகர்கள் இரண்டு பேருக்குத்தான் இருக்கிறார்கள். ஒன்று அஜித்... மற்றொன்று ரஜினிகாந்த்” இவ்வாறு அவர் பேசினார்.