சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.