சென்னை,
தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நேர்காணல் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.
கட்சியில் மாவட்டங்கள் வாரியாக 18-ந்தேதி தென்மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டங்க ளுக்கும், 19-ந்தேதி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும், 20-ந்தேதி ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 41 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.
நேற்று 5-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. காலையில் கடலூர் கிழக்கு, விழுப்பு ரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சீபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. மாலையில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம் வடக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று காலை 9 மணி திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கும், மாலை 4 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்துக்கான நேர்காணலும் நடைபெறுகிறது.