சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் அவரது மகன் ராகுல் சரத் ஆகிய மூவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் மக்கள் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பது முக்கிய கடமை எனவும் கூறினார். மேலும் 100சதவீதம் வாக்கு அவசியம் எனவும் கூறினார் எனது மகன் முதல் முறையாக வாக்கு செலுத்தி இருப்பது சந்தோஷம் அளிப்பதாக கூறினார். மேலும் விஜய் அரசியல் பற்றி கேட்டதற்கு, நான் இங்கு ஓட்டு போட தான் வந்திருக்கிறேன், யாரைப் பற்றியும் பேச வரவில்லை எனவும் காட்டமாக கூறினார்.