அரசியல் களம்

கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் விஜயால் முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? - திருமாவளவன் கேள்வி

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் விஜய் யாரை அமர்த்த பார்க்கிறார் என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.திருமாவளவன் கூறியதாவது: "கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் விஜயால் முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? ஆக முடியாது என அவருக்கே தெரியும்; ஏன் பெரம்பூரிலே விஜய் ஜெயிப்பாரா என்பதே கேள்விக்குறிதான். அந்த சந்தேகத்தால்தான் திருச்சி கிழக்கிலும் அவர் போட்டியிடுகிறார்.

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர்த்த பார்க்கிறார்?. அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால், இந்த தேர்தலில் அது சாத்தியமா? என்பது அவருக்கே தெரியும். தி.மு.க. ஆட்சியை அப்புறப்ப டுத்திவிட்டு, அவருடைய தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தும், பா.ஜனதா -அ.தி.மு.க. கைகள்தான் ஓங்கும் என தெரிந்தும், அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்தி ருக்கிறார்.

எனவே, அவருடைய தேர்தல் வியூகம் அ.தி.மு.க.-பா.ஜனதாவிற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. எனவே, நண் பர் விஜய்யின் அரசியலை நாங்கள் அடையாளம் காட்டுகி றோம். தி.மு.க.வை அப்புறப்படுத்திவிட்டு பா.ஜனதா, அ.தி.மு.க.வை அமர வைப்பது தான் என் வேலை என்பதை விஜய் மறைமுகமாக சொல்கிறார்.” என்றார்.