அரசியல் களம்

தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி: ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது - தமிழக பா.ஜ.க. விமர்சனம்

தி.மு.க.வை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் என்று தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி தி.மு.க.வை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தே.மு.தி.க.-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது தி.மு.க. அத்தகைய மக்கள் விரோத தி.மு.க.வுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT