சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாமக தலைவர் அண்புமணி அடுத்த மூன்று நாட்களுக்கு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக பா.ம.க. (அண்புமணி) தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி , ஏப்ரல் 21-ஆம் தேதி ஆகிய 3 நாள்களும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
பரப்புரை விவரம் வருமாறு:
19.04.2026 - ஞாயிற்றுக்கிழமை
காலை 11.00 மணி - குடவாசல் (நன்னிலம் தொகுதி )
மாலை 4.00 மணி - செம்போடை (வேதாரண்யம் தொகுதி)
மாலை 6.00 மணி - பிராதாமபுரம் (கீழ்வேளூர் தொகுதி )
மாலை 7.00 மணி - மயிலாடுதுறை
மாலை 8.00 - செம்பொனார்கோவில் (பூம்புகார் தொகுதி)
20.04.2026 - திங்கள் கிழமை
காலை 11.00 மணி - மேச்சேரி (மேட்டூர் தொகுதி )
மாலை 4.00 மணி - ஜலகண்டபுரம் (எடப்பாடி தொகுதி)
அதிமுக பொதுச்செயலாளர்- வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பரப்புரை
மாலை 6.00 மணி - சேலம் மேற்கு
மாலை 7.00 மணி - சேலம் வடக்கு
மாலை 8.00 மணி - தாரமங்கலம் (சங்ககிரி தொகுதி )
21.04.2026 - செவ்வாய்க்கிழமை
காலை 10.00 மணி - சேலம் பொதுக்கூட்டம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பிரசாரம்
மாலை 2.00 முதல் 4.00 மணிவரை - தருமபுரி நிறைவு பிரசாரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.