சென்னை,
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குப் எப்போது வேண்டு மானாலும் அழைக்கப்படலாம். எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பதை தி.மு.க.விடம் தெரிவிப்போம். அது குறித்து எதுவும் இப் போது நான் சொல்ல இயலாது.
தி.மு.க. ஏற்கனவே வெற்றி முகத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் மனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறி விப்புகளால் கவர்ந்து விட்டதால், எப்படி எதிர்கொள்வது என்ற நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அது அவரின் கட்சிக்கு உள்ள உரிமை. அதை பற்றி நான் எந்த வித மான கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் தயார் ஆகி கொண்டிருக்கிறது. மற்ற தேர்தல் அறிக்கையில் இல்லாதவை சில எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.