சென்னை
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் போட்டியிடுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்கு போட்டியிட சொல்கிறார்களோ அங்கு போட்டியிடுவேன் கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பேன்.
மீண்டும் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, திமுக கூட்டணியில் சீட் கேட்டுள்ளோம், எங்கள் கட்சியின் வலிமை என்ன என்பது எங்களுக்கு தெரியும். திமுக கூட்டணியில் புதிதாக 13,14 கட்சிகள் வந்துள்ளது. இவர்கள் எல்லோரும் பாஜகவின் பாதக செயலுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது, அதற்கான வழிவகையை நாமே ஏற்படுத்திவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். அதனால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது முக்கியமில்லை மீண்டும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்க கூடிய திமுகவின் ஆட்சி தொடரவேண்டும் என்பதே முக்குலத்தோர் புலிப்படையின் நிலைப்பாடாகும்.
திருவாடானை தொகுதியை ஓபிஎஸ் தரப்பு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, எனக்கு தளபதி எந்த தொகுதியை கொடுக்கிறாரோ, யாரை எதிர்த்து நிற்க சொல்கிறாரோ அந்த தொகுதியில் நிற்பேன். எந்த சின்னத்தில் நிற்பீர்கள் என்று கேட்டதற்கு தளபதியின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்பேன் என்று கூறினார்.