அரசியல் களம்

நாளை முதல் தவெகவில் வேட்பாளர்கள் நேர்காணல்

பனையூர் அலுவலகத்தில் விஜய் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட இருக்கிறது. 234 தொகு​தி​களி​லும் தனித்​துப் போட்​டி​யிட விஜய் தயா​ராகி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்ள விசில் சின்​னத்தை வலு​வான பிர​சார ஆயுத​மாக மாற்ற விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார்.

இதற்கிடையில், தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து, சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை 2 வாரங்களில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. வேட்​பாளர் பட்டியலை விஜய் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது.

இந்​தப் பட்​டியலில் பெண்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்படும் என்று கூறப்​படு​கிறது. மேலும், மாவட்​டச் செய​லாளர்கள், பிரபலங்​கள், தொழில​திபர்​களுக்கு முக்​கிய இடங்​கள் ஒதுக்கப்பட உள்​ள​தாக​வும் தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நாளை (10-ம் தேதி) முதல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளார்.