அரசியல் களம்

நாளை மறுநாள் முதல் தவெகவில் வேட்பாளர்கள் நேர்காணல்

வேட்​பாளர் பட்​டியலை விஜய் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட இருக்கிறது. 234 தொகு​தி​களி​லும் தனித்​துப் போட்​டி​யிட விஜய் தயா​ராகி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்ள விசில் சின்​னத்தை வலு​வான பிர​சார ஆயுத​மாக மாற்ற விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார்.

இதற்கிடையில் தவெக சார்பில் சட்டபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை 2 வாரங்களில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. வேட்​பாளர் பட்டியலை விஜய் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது.

இந்​தப் பட்​டியலில் பெண்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்படும் என்று கூறப்​படு​கிறது. மேலும், மாவட்​டச் செய​லாளர்கள், பிரபலங்​கள், தொழில​திபர்​களுக்கு முக்​கிய இடங்​கள் ஒதுக்கப்பட உள்​ள​தாக​வும் தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நாளை மறுநாள் (10-ம் தேதி) முதல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளார்.