டிடிவி தினகரன் 
அரசியல் களம்

மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் காவல்துறையினரின் அரும்பெரும் பணிகளைப் போற்றுவோம் - டிடிவி தினகரன்

கடமையை உயிர்மூச்சாகக் கொண்டு, நாட்டின் அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் காவலர்கள்.

சென்னை,

காவலர் வீரவணக்க நாளான இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காவலர் வீரவணக்க நாள்

கடமையை உயிர்மூச்சாகக் கொண்டு, நாட்டின் அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களின் அளப்பரிய பணியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவுகூரும் காவலர் வீரவணக்க நாள் இன்று.

காவல் துறையின் பணிகளைப் போற்றுவோம்

குடும்பத்தைப் பிரிந்து, உயிரைப் பணயம் வைத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு, நாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த காவலர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில், இக்கட்டான சூழல்களிலும் இரவு பகலாக உழைத்து, மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் காவல்துறையினரின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT