அரசியல் களம்

லால்குடி தொகுதியில் 101 ஓட்டுகளே பெற்ற மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

திருச்சி,

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போது அவர், தண்டவாளத்தில் படுத்தும், துணி துவைத்து என நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், லால்குடி சட்டமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் மிகவும் குறைந்த ஓட்டுகளே பெற்றுள்ளார். அதாவது அவர் பெற்ற ஓட்டுகள் 101 என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த தொகுதியில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகளை (390) விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.