அரசியல் களம்

37 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் களம் இறங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

பழனியில் கடைசியாக 1989-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வென்று இருந்தது.

திண்டுக்கல்,

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்று இருக் கிறது. இதன்மூலம் அந்த கட்சி வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை பெற்று இருக்கிறது. அதன்படி திண்டுக்கல், பழனி ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கனவே வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதில் திண்டுக்கல் தொகுதியில் 6 முறை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 3 முறை வெற்றியை பதிவு செய்தது. ஆனால் கடந்த முறை திண்டுக்கல் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2-வது இடமே கிடைத்தது. எனவே திண்டுக்கல்லில் மீண்டும் களம் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பழனி தொகுதி அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

திண்டுக்கல்லில் இருந்து பழனி தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாறி இருந்தாலும், அங்கும் 3 முறை வெற்றி பெற்று இருக்கிறது. பழனியில் கடைசியாக 1989-ம் ஆண்டு வென்று இருந்தது. மேலும் கடந்த 2 முறை பழனி, தி.மு.க. வசம் இருந்தது. எனவே தி.மு.க. கூட்டணி பலத்துடன் பழனியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெறும் ஆர்வத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளது.

SCROLL FOR NEXT