அரசியல் களம்

விஜய்யின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும்: கமல்ஹாசன் வாழ்த்து

நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.