சிவகாசி,
சிவகாசியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை நிருபர்களிடம் கூறியதாவது:-சீமான் சொல்வதை போல் நாங்கள் யாரையும் மிரட்டி தொகுதிகளை வாங்கவில்லை. நாங்கள் கேட்டது 41 தொகுதிகள். ஆனால் தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சில கட்சிகள் சேர்ந்ததால் நாங்கள் கேட்ட தொகுதிகளை குறைத்துக்கொண்டோம். காரைக்குடியில் சீமான் வெற்றி பெற முடியாது.
அங்கு அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிதான் வெற்றி பெறுவார். சீமான் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற மாட்டார்கள். கட்சியை பற்றி விமர்சிப்பதை சீமான் நிறுத்தாவிட்டால், அவ ருக்கு சங்கடம் ஏற்படும் நிலை உருவாகும். அண்ணாமலை என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். அவர் இப்போது தொகுதி மறுவரையரை குறித்து பேசியதையும் யாரும் நம்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.