அரசியல் களம்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து கொண்டனர்.

இந்த நிலையில், தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இல்லாத நிலையில், பேரவை செயலரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் ஓபிஎஸ். அவரை தொடர்ந்து மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

SCROLL FOR NEXT