அரசியல் களம்

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டது: செல்லூர் ராஜு

அதிமுகவில் நடக்கும் ஒரு துரும்பைகூட தூணாக்கி விடுகிறார்கள் என்று செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவில் ஒதுக்கி, நீக்கி வைக்கப்பட்டவர்களுக்கு திமுகவில் பதவி வழங்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். எடப் பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பார். ஓ.பன்னீர்செல்வம் தகுதியில்லாமல் பேசுகிறார்.

சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து அவமானம் செய்தார்கள். அதிமுகவை ஓ.பன்னீர் செல்வம் காட்டி கொடுத்தவர். எனவே அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டது. அவர் திமுகக்கு ஆதரவாக பேசியதை எதிர்த்து கேள்வி கேட்டேன். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எனக்கும் ஒரு முறை பலத்த வாக்குவாதம் நடந்தது.

அவர் 2021-ல் இருந்து திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தின் இறுதியில் ஒரு கூட்டு கிளியாக பாடல் ஒலிபரப்பானது. இது ஆபரேட்டர் செய்தது. இந்த பாட்டை எல்லாம் போய் கூட்டணி கட்சிகள் போட சொல்லுமா? இப்போதெல்லாம் அதிமுகவில் நடக்கும் ஒரு துரும்பைகூட தூணாக்கி விடுகிறார்கள். அதே திமுகவில் நடக்கும் தூணைகூட துரும்பாக மாற்றி கூறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.