அரசியல் களம்

எடப்பாடி பழனிசாமியுடன் பாரிவேந்தர் சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..?

கூட்டணியில் தங்களுக்கு இத்தனை தொகுதிகளை வேண்டும் என்று குறிப்பிட்டு கொடுத்திருத்திருப்பதாக பாரிவேந்தர் கூறினார்.

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி யின் (ஐ.ஜே.கே.) நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். கூட்டணியில் தொகுதி பங்கீடு சார்ந்து இந்த சந்திப்பு இருந்ததாக சொல்லப்பட்டது.

பின்னர் பாரிவேந்தர் கூறுகையில், 'மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தேர்தல் நெருங்குகிற காலமாக இருப்பதால், கூட்டணியில் எங்களுக்கு 7 தொகுதிகளை குறிப்பிட்டு கொடுத்திருக்கிறோம். பா.ஜனதாவோடு கலந்து பேசி முடிவு செய்வதாக சொல்லியுள்ளார்' என்றார்.

ரவிபச்சமுத்து கூறும் போது, 'தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி வரவேண்டும். கூட்டணியில் இருக்கும் கட்சிக ளுக்கு எந்த நெருக்கடியும் வராமல், அந்தந்த கட்சிகளுக்கு எங்கு பலமோ, அந்த தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்து பேசி வருகிறோம். கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். நாங்கள் எங்கள் சின்னத்தில்தான் போட்டி யிடுகிறோம். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அ.தி.மு.க. கலந்து ஆலோசித்து நல்ல முடிவை தெரிவிப்பார்கள்' என்றார்.