அரசியல் களம்

ராமதாஸ், அன்புமணி புகைப்படத்துடன் பாமக கொடி

தேர்தலில் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இதுவரை அறிவிக்கவில்லை.

சென்னை,

பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக் கும் இடையே கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு கோர்ட்டு வரை சென்றுள்ளனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜனதா அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி யில் இடம்பெற்றுள்ளது. தேர்தலில் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் திறக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் அலுவலகம், தேசிய ஜனநாயக கூட்டணியின் அலுவலகமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு கூட்டணி கட்சியினரின் கொடி தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதில் பா.ம.க.வின் கொடியில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.