சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் தொகுதியில் திமுக சார்பில் ஆசி.எம். தியாகராஜன் போட்டியிடுகிறார்.